Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தெ.ஆ. ஏ உடன் 2வது ஓடிஐ இந்தியா ஏ அபார வெற்றி

ராஜ்கோட்: ராஜ்கோட்டில் இந்தியா ஏ - தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் இடையே 2வது அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா, 20.3 ஓவரில் 132 ரன்னுக்கு சுருண்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா 21 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்தியா ஏ, 27.5 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் அரை சதம் விளாசினார். இந்த வெற்றியை அடுத்து, இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.