Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செவிலியர்களுக்கு வெளிநாட்டு மொழி பயிற்சி: விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை: செவிலியர்களுக்கு வெளிநாட்டு மொழி பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதன்முறையாக, செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் போன்ற வெளிநாட்டு மொழி பயிற்சியை இலவசமாக வழங்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள், பிஎஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங்கில் தகுதி பெற்றிருக்க வேண்டும். செவிலியர்களின் வசதிக்காக வெளிநாட்டு மொழி பயிற்சி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள செவிலியர்கள் https://forms.gle/wtxC4jeTPCd12rgB6 என்ற கூகுள் படிவத்தின் மூலம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in, http://www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தில் அல்லது வாட்ஸ்அப் எண் 6379179200 மூலம் தொடர்பு கொள்ளவும்.