சென்னை: நவம்பர்.25, 26 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார். நவம்பர்.25ம் தேதி கோவை மாவட்டத்தில் செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நவம்பர்.25ம் தேதி மாலை தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார். முதலமைச்சர் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஈரோட்டு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
+
Advertisement


