Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்; மாவட்ட வாரியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி செயலர்களை நிரப்ப டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,450 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் உள்ள காலிப் பணியிட விவரங்களை ஆன்லைன் வழியாகவும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

சம்பள விகிதம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு 01-07-2025 அன்றைய தேதிப்படி பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 31 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்கள் வழங்கப்படும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு எட்டாம் வகுப்பு வரை தமிழில் ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். அந்தந்த தாலுகா பகுதியில் வசிப்பவராகவும், தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய நபர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தை அந்த மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேற்படி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் www.thrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.