Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தொடங்கியது

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நெருங்கும் பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால் மழைக்காலத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக சீரமைப்பு செய்யும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்து தங்கு தடையின்றி மழை நீர் வெளியேற வழிவகை செய்யதும், சாலைகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் அதிக பாதிப்படையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, பல்லாவரம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கையை இன்று ஆய்வு செய்தனர்.

மழைநீர் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை. கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன், சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி கேட்டுள்ளார்.

சிரமம் இருந்தால் சொல்லுங்கள், அனைத்து அமைச்சர்களும் இருக்கிறோம், தீர்வு கொடுக்கிறோம். ஆரம்பித்துவிட்டோம், முடிப்போம்னு சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. மழை வந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது அமைச்சர் நேரு ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் பின்னால் இருக்கும் கல்யாணபுரம் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் பாதிக்கிறது. பலமுறை சொல்லிவிட்டேன் பல அமைச்சர்களும் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த மழையின் போது எத்தனை புகார்கள் பெறப்பட்டன, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பணம் இல்லை, வேலை நடைபெறவில்லை என்று மக்களிடம் போய் சொல்ல முடியாது என்று தயாநிதி மாறன் எம்பி கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை, நீர்வளம், வருவாய்த்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.