திருத்தணி: வடகிழக்கு பருவமழைக்கு திருத்தணி பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இந்நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில் திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் முன்னிலையில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது. திருத்தணி- சித்தூர் சாலை, பொதட்டூர்பேட்டை- பள்ளிப்பட்டு சாலை, திருத்தணி புதிய பைபாஸ் சாலையில் தார் நிரப்பி சீரமைத்து வருகின்றனர். திருத்தணி உப கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement
