சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 29 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். படகுகள், மின்மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், ஜேசிபி என 57,730 மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. நீலகிரி, சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தலா 2 குழுக்கள், ஆவடியில் 2, திருவள்ளூர் 1, கடலூர் 2, தூத்துக்குடி 3, கோவை 1, நாகையில் 3 என 16 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
+
Advertisement
