சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த மழையின் அளவு, எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
+
Advertisement