சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் மழையால் பழுதடையும் சாலைகளை உடனுக்குடன் சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார பாக்ஸ்கள், கேபிள்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
+
Advertisement