Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையொட்டி 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்றபாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப் பிறகு, எச்சரிக்கை விடுக்கப்பட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இயக்குநர் கிரந்தி குமார், விழுப்புரம் மாவட்டத்திற்கு தொழிலாளர் நலன் இயக்குநர் ராமன், கடலூர் மாவட்டத்திற்கு சுரங்கம் மற்றும் கனிமவளம் இயக்குநர் மோகன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கோ ஆப்டெக்ஸ் இயக்குநர் கவிதா ராமு, திருவாரூர் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலன் ஆணையர் ஆனந்த், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மருத்துவ சேவைகள் கழகம் கிருஷ்ணனுன்னி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்  வெங்கடபிரியா, அரியலூர் மாவட்டத்திற்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை பொறுத்தவரையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி மண்டல அதிகாரிகள் முன்னோற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்க அறிவுறுத்தினார்.