வடசென்னை வளர்ச்சிக்கு மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: வடசென்னை வளர்ச்சிக்கு மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதி செய்யும்.வடசென்னை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு இது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் முதலமைச்சரின் பதிவில்; "மருத்துவமனைகள், முதல்வர் படைப்பகங்கள், குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையங்கள் என வடசென்னையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!
1967-இல் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன். இன்று துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்துள்ளார். விரைந்து பணிகளை முடித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்திற்கு பாராட்டுகள்!
வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிடமாடல் அரசு உறுதிசெய்யும்!" என தெரிவித்துள்ளார்.



