பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை அனல் மின்நிலைய நுழைவுவாயிலில் ஊழியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள், ‘’அனல் மின்நிலையத்தில் பணியாற்றிவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், அடையாள அட்டை வழங்கிட வேண்டும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை வேலை வாங்குவதை கண்டறிந்து அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ‘’ தங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்’ என்று தெரிவித்தனர்.