பியோங்யாங் : Hamburger, Icecream, Karaoke ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு, சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் கலாச்சார தாக்கத்தை தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவிட்டது. வடகொரிய அரசின் உத்தரவின்படி, Hamburger, Icecream மற்றும் Karaoke போன்ற சொற்களை பயன்படுத்தக்கூடாது.
இந்த சொற்களுக்கு பதிலாக, வடகொரிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களிலும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கு வடகொரிய இளைஞர்கள் மத்தியில் பரவாமல் தடுப்பதாகும். வடகொரியா ஏற்கனவே தனது தனித்துவமான கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய தடை, மேற்கத்திய நாடுகளின் மொழி மற்றும் வாழ்க்கை முறை வடகொரிய சமூகத்தில் ஊடுருவுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.