சென்னை: எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் நடந்தது பொதுவான கலந்தாலோசனை கூட்டம் தான் நடந்தது. எங்கள் கூட்டணி பலம் இழக்கவில்லை. எங்கள் கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இன்னும் ஏழு மாதங்கள் தேர்தலுக்கு இருக்கிறது. பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருக்கிறது. எனவே நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.
எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது. கூட்டணி பிரச்சனை குறித்து அண்ணாமலை சொன்னது சரிதான். இன்னும் தேர்லுக்கு ஏழு மாதங்கள் உள்ளன. உறுதியாக மிகப்பெரிய மாற்றங்கள் வரும். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரிடம் பேசியிருக்கிறேன். காலம் வரும்போது சரியாக வரும். பாஜ குடும்ப கட்சி அல்ல. இது தேசிய கட்சி. என்னுடைய பதவி காலம் மூன்று ஆண்டுகள் தான். நான் வருவதற்கு முன்பாக மாநில இளைஞரணி துணை தலைவராக என் மகன் இருந்தார். பாஜவில் வாரிசு அரசியல் இப்போதும் இல்லை, எப்போதும் வரப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.