தஞ்சாவூர்: தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு போலீசார் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 2 நாட்களில் நோ என்ட்ரியில் வந்த 20 காவலர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம், அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லாமல் அனைவரும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எஸ்பி ராஜாராம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
+
Advertisement


