திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உத்தரவை மீறி பக்தர்கள் காத்திருப்பு கட்டடம் கட்டப்பட்டு வருவதாக புகைப்படத்துடன் மனுதாரர் புகார் அளித்தார். நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வராமல் கட்டுமான .பணிகளை மேற்கொள்வதா என ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது.