வாஷிங்டன்: வரும் அக்டோபர் 10ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய டிரம்ப்,’எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும். யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியாவனன்’ என்று தெரிவித்தார்.
+
Advertisement