ஆஸ்லோ: 2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கடந்த நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சோடா(58) அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த பெண் போராளியான மரியா கொரினா மச்சோடா, வெனிசுலா அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து போராடியவர்.
நோபல் பரிசை வாங்க நாட்டை விட்டு வௌியேற மச்சோடாவுக்கு வெனிசுலா அரசு தடை விதித்தது. இதனால் மரியா கொரினா மச்சோடா நோபல் பரிசு வாங்க செல்வதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் நோபல் பரிசு வழங்கும் விழா ஆல்பிரட் நோபலின் பிறந்தநாளான நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்றது. ஆனால் இந்த விழாவில் மரியா கொரினா மச்சோடா பங்கேற்கவில்லை. அவரது மகள் பரிசை ஏற்று கொண்டார்.


