சென்னை: என்.எல்.சி.யில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.442 கோடி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கை நவ.5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாம்பல் விற்பனை, ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, காலாவதியான டெண்டர்களின் காலத்தை நீட்டித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement