நிசான் மோட்டார் நிறுவனம் கார்களின் விலையை ரூ.1,00,400 வரை குறைத்துள்ளது. விசியா மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷோரூம் விலை ரூ.6.14,000 ல் இருந்து ரூ.5,61,600 ஆக குறைந்துள்ளது. இதுபோல் விசியா பிளஸ் ரூ.6,07,400, அசென்டா ரூ.6,66,800, கியூரோ எடிஷன் ரூ.7,59,600, டெக்னா ரூ.8,15,900 ஆக குறைந்துள்ளது.
இஇசட் ஷிப்ட் வரிசையில் துவக்க வேரியண்டான விசியா ரூ.6,74,500ல் இரு்து ரூ.6,16,900 ஆகவும், கியூரோ எடிஷன் ரூ.8,85,500ல் இருந்து ரூ.8,09,900 ஆகவும், டெக்னா பிளஸ் ரூ.9,82,000ல் இருந்து ரூ.8,98,200 ஆகவும் சரிந்துள்ளது.
டர்போ வரிசையில் என்கனெக்டா ரூ.9,38,000ல் இருந்து ரூ.8,57,900 ஆகவும், டர்போ சிவிடி கியூரோஸ்பெஷல் எடிஷன் ரூ.10,86,500ல் இருந்து ரூ.9,93,800 ஆக குறைந்துள்ளது. டாப் வேரியண்டான டர்போ எக்ஸ் டிரோனிக் சிவிடி டெக்னா பிளஸ் ரூ.11,76,000ல் இருந்து ரூ.10,75,600 ஆக குறைந்துள்ளது.