டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெல்ல முடியும் என நிர்மலாவிடம் செங்கோட்டையன் எடுத்துரைத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து இன்று தமிழகம் திரும்பும் செங்கோட்டையன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement