நீலகிரி: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து நாளை ஒருநாள் சுற்றுலா தலங்களும் மூடப்படும். நீலகிரியில் மழை பாதிப்பு குறித்து 1077, 0423-2450034, 2450035 எண்களில் தொடர்பு கொள்ளலாம். 94887 00588 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு குறித்த தகவலை பகிரலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.