நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க வசதியாக கட்டணமில்லா அவசர கால உதவி எண் 1800-425-4343 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ அறிமுகப்படுத்தினார். வனவிலங்கு குறித்த தகவலை இந்த எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
+
Advertisement