நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்த்தவர் சிக்கனுமன் வருவாய் துறையால் தாசில்தாரக பனியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இவருடைய மகன் என்ஜினீரிங் முடித்துவிட்டூ அரசு வேலைக்காக முயற்சி செய்துவந்துள்ளார். இதை அறிந்த நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரியமலை பகுதியை சேர்ந்த சோமு என்பவர் சிக்கனுமனை தொடர்பு கொண்டு அவருடைய மகனுக்கு ரயில்வேதுறையில் வேலை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று கூறியுள்ளார்.
எப்படியாவது மகனுக்கு வேலைகிடைத்தால் போதும் என்று ஆசையால் சிக்கனுமன் சோமுவிடம் ரூ. 16 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், சோமு கூறியபடி அரசு வேலை வாங்கிதரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிக்கனுமன் பணத்தை திருப்பிகேட்டுள்ளார். பணத்தை திருப்பி தருவதாக கூறி சோமு நீண்ட நாட்களாக இழுத்து அடித்து பணத்தை கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். இதனால் எமற்றம் அடைந்த சிக்கனுமன் இதுகுறித்து, ஊட்டி பொருளாதார குற்றபிரிவு போலீசில் புகாரளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரூ. 16 லட்சம் மோசடி செய்ததாக சோமு மற்றும் கோவையை சேர்ந்த குமாரிலதா ஆகிய இரண்டு பேரை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதைபோல் இந்த குற்றசாட்டில் தொடர்புடைய சிவராமன் என்பவரையும் பொருளாதார குற்ற பிரிவினர் தேடி வருகின்றனர். மேலும் இவர் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துவந்ததாக கூறப்படுகிறது . எனவே அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்