நீலகிரி : நீலகிரி மாவட்டம் மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைப் பகுதி ஊர்களில் ரேஷன் கடைகளை உடைத்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்த மக்னா யானை மர்மமான முறையில் சாலையிலேயே உயிரிழந்தது. ஜேசிபி வரவழைக்கப்பட்டு யானையின் சடலம் கொண்டு செல்லப்பட்டது. யானை உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறாய்வுக்குப் பிறகே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement