Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்

பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ் (ஐடிஐ/ஐடிஐ அல்லாதது)

மொத்த காலியிடங்கள்: 45. ஐடிஐ-27 இடங்கள், ஐடிஐ அல்லாதது-18.

தகுதி: அ. ஐடிஐ பிரிவுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. ஐடிஐ அல்லாத பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வயது முதல் 35க்குள்.

10ம் வகுப்பு/ ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பவர். அவர்களில் ஐடிஐ படித்தவர்களுக்கு ஒரு வருடமும், ஐடிஐ அல்லாத பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் பயிற்சி வழங்கப்படும்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல்விவரங்களுக்கு www.cordite.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (12.06.2025).