நிலக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ரூ.1,200க்கு விற்பனையான மல்லிகைப்பூ விலை அதிகரித்து தற்போது கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ரூ.800க்கும், முல்லை ரூ.600க்கும், பிச்சிப்பூ ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.100க்கு விற்ற ஒரு பை அரளிப்பூ, தற்போது விலை அதிகரித்து ரூ.600 வரை விற்பனையாகிறது.
+
Advertisement