லிவர்பூல்: உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள், பிரிட்டனின் லிவர்பூல் நகரில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த 51 கிலோ எடைப் பிரிவு மகளிர் போட்டி ஒன்றில், இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன், அமெரிக்காவின் ஜெனிபர் லோஸனோவுடன் மோதி, அபாரமாக செயல்பட்டு சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீராங்கனை லவ்லினா போர்கோஹய்ன், 75 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில், துருக்கி வீராங்கனை பஸ்ரா இஸில்தரிடம் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவினார்.
+
Advertisement