பனாஜி: கோவாவின் அர்போராவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற நைட் கிளப்பில் கடந்த 7ம் தேதி நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து கிளப் உரிமையாளர்கள் சவுரப் மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தின் புக்கெட் பகுதிக்கு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக இன்டர்போல் அதிகாரிகள் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தனர். இந்நிலையில் நைட் கிளப் உரிமையாளர்கள் இரண்டு பேரையும் தாய்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே நைட் கிளப் உரிமையாளர்கள் சவுரப் மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர்கள் மூலமாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.
+
Advertisement


