அபுஜா: நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் உள்ள மாகா நகரில் கும்பலால் துப்பாக்கி முனையில் 25 பள்ளி மாணவர்கள் கடத்திச்செல்லப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், நைஜர் மாகாணத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள பாபிரி நகரில் விடுதியுடன் கூடிய செயின்ட் மேரிஸ் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்குள்ள 303 மாணவ, மாணவிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச்சென்றது. மேலும் 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
+
Advertisement


