Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நைஜீரியாவில் துயரம்; 12 ஆசிரியர், 300 மாணவர்கள் கடத்தல்: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

அபுஜா: நைஜீரி​யா​வில் போகோ ஹரம் தீவிர​வா​தி​ அமைப்பினர், கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​பாக பள்​ளி குழந்​தைகளை கடத்​தி சென்​றனர். இந்த தீவிரவாத அமைப்​பினர், மற்​றவர்​களின் கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக இந்த படுபாதக செயலில் ஈடுபட்டனர். அதே​போல் தற்​போதும் நைஜீரி​யாவை சேர்ந்த ஒரு கும்​பல், பள்​ளி குழந்​தைகளை கடத்​தி செல்​லும் சம்​பவங்​களில் ஈடு​படு​கிறது. அதாவது, நைஜீரி​யா​வின் வட பகு​தி​களில் முஸ்​லிம்​கள் பெரும்பான்மையாக உள்​ளனர். இவர்​கள், இங்​குள்ள கிறிஸ்தவ பள்​ளி​களை குறி​வைத்து கடத்​தல் நடவடிக்​கை​யில் ஈடு​படு​கின்​றனர். நைஜீரி​யா​வின் கெப்பி மாநிலத்​தின் மகா நகரில் 25 பள்ளி குழந்​தைகள் கடத்​தப்​பட்​டனர்.

இந்​நிலை​யில் நைஜர் மாநிலத்​தில் உள்ள புனித மேரி மேல்​நிலைப் பள்​ளி​யில் இருந்து 300க்​கும் மேற்​பட்ட மாணவர்​களும் 12 ஆசிரியர்​களும் வனப்பகு​திக்​குள் கடத்தி செல்​லப்பட்​டுள்​ளனர் என்று பள்ளி நிர்​வாக தலைவர் புலுஸ் தாவா யோகனா தெரி​வித்​துள்​ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பள்​ளி​யின் பாது​காவலரை துப்​பாக்​கி​யால் சுட்டு கடத்​தி சென்றுள்ளனர். இந்த கடத்​தலுக்கு இதுவரை எந்த குழு​வும் பொறுப்​பேற்​க​வில்​லை. கடத்தப்​பட்டவர்களை மீட்க நைஜீரிய அரசு சிறப்பு படைகளை அமைத்​துள்​ளது.

இந்த சிறப்பு படைகளுடன் உள்​ளூர் வேட்​டை​க்காரர்​கள் மற்றும் பள்ளி நிர்​வாக​மும் ஈடுபட்டுள்ளது. மேலும் பாது​காப்பு படை​யினரும், குழந்​தைகளை மீட்​கும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர் என நைஜர் மாநில போலீ​சார் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பிணை தொகைக்​காக பள்ளி மாணவர்​கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது’ என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குவாரா மாநிலத்​தில் உள்ள தேவால​யம் ஒன்​றின் மீது துப்​பாக்கி ஏந்​திய சிலர் தாக்​குதல் நடத்தி இரு​வரை சுட்​டுக் கொன்​றனர். பின்​னர் 38 பேரை கடத்​தி சென்​றனர். இவர்​களை விடுவிக்க ஒவ்​வொரு​வருக்​கும், 69,000 அமெரிக்க டாலர் பணம் வேண்​டும் என கடத்​தல்​காரர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.