வெலிங்டன்: நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர்நடந்து வருகிறது. இதில் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் இன்று வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசி்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ்அணியில் ஜான் காம்ப்பெல்- பிராண்டன் கிங் முதல் விக்கெட்டிற்கு 66ரன் எடுத்தனர். கிங் 33 ரன்னிலும், காம்ப்பெல் 44 ரன்னில் அவுட் ஆகினர். பின்னர் வந்த வேம் ஹாட்ஜ் ரன் கணக்கை தொடங்கும் முன் மைக்கேல் ரே பந்தில் டக்அவுட்ஆனார்.
ஷாய் ஹோப் 48 ரன்னிலும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 29 ரன்னிலும் பிளேர் டிக்னர் பந்தில் ஆட்டம் இழந்தனர். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜஸ்டின் கிரீவ்ஸ் 13 ரன்னிலும், கேமர் ரோச் ரன் எதுவும் எடுக்காமலும்ரே பந்தில் அவுட் ஆகினர். 66 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் எடுத்திருந்தது.


