ஹராரே: ஜிம்பாப்வேயில், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே, நியூசி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள், நியூசி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன் எடுக்க திணறினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன் மட்டுமே எடுத்தது.
அதையடுத்து, 121 ரன் வெற்றி இலக்குடன் நியூசி. களமிறங்கியது. துவக்க வீரர்களில் ஒருவரான டெவான் கான்வே அற்புதமாக ஆடி 40 பந்துகளில், ஆட்டமிழக்காமல் 59 ரன் குவித்தார். 13.5 ஓவரில் நியூசி, 2 விக்கெட் மட்டுமே இழந்து 122 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.