மதுரை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு 2026, ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்காக, நெல்லை மாவட்டத்தில் அக். 14ம் தேதி (நாளை) பாளை ஒன்றிய பகுதிகளிலும், அக். 15ல் பாப்பாக்குடி ஒன்றிய பகுதிகளிலும், அக்டோபர் 16ல் சுத்தமல்லி முதல் தென்பத்து வரையிலும், அக். 17ல் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டல பகுதிகளிலும், அக். 18ல் நெல்லை மண்டல பகுதிகளிலும் டாக்டர் கிருஷ்ணசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement