நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: போதை பொருள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழுப்புணர்வு பிரசாரத்தை தமிழக முதல்வர் செய்து வருவது பாராட்டுக்குரியது. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவ கொலை செய்வது கண்டிக்கத்தக்கது. 2017 முதல் 2025 வரை 65 ஆணவ கொலைகள் நடந்துள்ளன. சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு பாதுகாப்பு அளிக்க புதிய சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement