பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று கூறுகையில்,’ எங்கள் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு வேலை உள்ள ஒரு உறுப்பினர் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட 20 நாட்களுக்குள் கொண்டு வரப்படும்’ என்று தெரிவித்தார்.
+
Advertisement