புதிய பாடத்திட்டத்தால் மாணவர்கள் அவதி தகுதி தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு
சென்னை: திருச்சியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் புதிய பாடத்திட்டத்தையும் இணைத்துள்ளனர். இதனால், தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, போட்டி தேர்வை மூன்று வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.