சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் சேவை நவம்பர்.7ல் தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து காலை 5.10க்கு புறப்படும் வந்தே பாரத் மதியம் 1.50க்கு எர்ணாகுளம் சென்றடையும். எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement
