டெல்லி: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் எனக் கருதப்பட்ட நிலையில் நிலபரப்புக்கு அருகே வரும்போது அது வழுவிழந்தது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து விட்டது.இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.