புதிய சட்டங்களால் தொழிலாளர் நலன்கள், உரிமைகள் பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: புதிய சட்டங்களால் தொழிலாளர் நலன்கள், உரிமைகள் பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது தொழிலாளர் நலனுக்கு முரணானது. சட்டத்தின் உள்ள குறைபாடுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.



