பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது தர்மஸ்தலா பொய் புகார் குறித்து என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பேசிய அமித் ஷா, தர்மஸ்தலா வழக்கு விசாரணையைஉன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட முடிவை எடுப்போம். மதத்தலங்களுக்கு எதிரான பிரசாரத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவோம் என்றார்.
+
Advertisement