சென்னை: தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் ஜெ.அன்பழகன் மேம்பாலத்தில் செல்லலாம்.
+
Advertisement