டெல்லி: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக தற்போது யுபிஎஸ்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். யுபிஎஸ்சியின் தலைவர் ஜெகதீஷ்குமார் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மாநில அரசின் சார்பாக வழங்கப்பட்ட பரிந்துரை பட்டியலில் இருந்து ஒருவரை இறுதி செய்வதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போது பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனுக்கு பிறகு புதிய டிஜிபியாக யார் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது தொடர்பான பரிந்துரை பட்டியலை தமிழ்நாடு அரசு சார்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் நிறைவு கூட்டத்தில் முன்வைத்து அதிலிருந்து இருவரை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லை என்றால் யுபிஎஸ்சியின் சார்பாக முன்மொழியப்படும் பெயர்களில் ஒருவர் புதிய டிஜிபியாக தமிழகத்திற்கு நியமனம் செய்யப்படுவார் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.