சென்னை: டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு 2ம் கட்ட டிசம்பர் பருவத்துக்குரிய நெட் தேர்வுக்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி 83 பாடங்களுக்கான நெட் தேர்வுகள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இதுசார்ந்த கூடுதல் தகவல்களை ugcnet.nta.nic.in/www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது