சுவிட்சர்லாந்து: ஊழியரை காதலித்த விவகாரத்தில் பிரபல நிறுவனமான நெஸ்லே சி.இ.ஓ. அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார். நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நெஸ்லே சி.இ.ஓ. லாரன்ட் ஃபிரெக்ஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார். தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் உடனான காதலை நிர்வாகத்துக்கு தெரிவிக்க தவறியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும், 40 ஆண்டுகளாக நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ட் ஃபிரெக்ஸிக்கு நிதிப் பலன்களும் ரத்து செய்யப்பட்டது. நெஸ்லே நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிலிப் நவ்ராடில் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement