Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்

டெல்லி: நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977 - 98086 02881, 98103 26134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் இந்தியர்கள் நேபாளம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் இருந்து காத்மாண்டு இடையே விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதேபோல் பயணிகள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நேபாளத்துக்கு செல்லும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் நிறுத்தியுள்ளது.