Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் 2 இடங்களில் பனிச்சரிவு 5 மலையேற்ற வீரர்களின் சடலங்கள் மீட்பு

காத்மண்ட்: நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை சுமார் 16,070 அடி உயரத்தில் அமைந்துள்ள மவுண்ட் யாலுங் ரியில் உள்ள அடிப்படை முகாமில் திங்களன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 மலையேற்ற வீரர்கள் பலியானார்கள். 3 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டனர். மேலும் மற்றொரு சம்பவத்தில் அக்டோபர் 28ம் தேதி முதல் கடுமையான பனிப்பொழிவுக்கு பின் காணாமல் போன இத்தாலியை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேர் மவுண்ட் பன்பாரி முகாமில் இறந்து கிடந்தனர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.