காத்மாண்டு: நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான இயக்கங்களும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த இடையூறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை பாதித்துள்ளது, இதனால் தாமதங்கள் மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது போல் நேற்று நேபாளத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
+
Advertisement

