காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி கவிழ, கார் விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்தது என தெரிய வந்துள்ளது. நேபாள நிதி அமைச்சரின் கார் 11 வயது சிறுமி மீது மோதியது இது தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலானது. 11 வயது சிறுமி மீது நிதி அமைச்சரின் கார் மோதிய விபத்தை மறைக்க அரசு முயன்றதாக தகவல் வெளியானது. சிசிடிவி வீடியோ வைராலனதை அடுத்து சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து GEN Z இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
GEN Z இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழக்கவே போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தின்போது நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். இளைஞர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். தொடர்ந்து இன்றும் கலவரம் நீடித்து வருவதால் நேபாளத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பை அந்நாட்டு ராணுவம் ஏற்றுள்ளது.
போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நேபாள ராணுவ தளபதி அழைப்பு விடுத்தார். கலவரத்தால் நாட்டின் பொது சொத்து சேதப்படுத்தப்படுவது கவலையளிக்கிறது என நேபாள ராணுவ தளபதி வேதனை தெரிவித்தார். நாட்டின் அமைதி, பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் திரும்ப வேண்டும். வன்முறை, கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேபாள வன்முறை தொடர்பான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.