காத்மாண்டு: சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து நேபாளம் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி சென்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து காத்மாண்டுவில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது க்கப்பட்டது. நேபாளத்தில் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement